sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., தள்ளுபடி, புது ரயில் பாதைபட்ஜெட்டில் வெளியாகுமா?: சிப்காட், கல்லுாரி, சுற்றுலா தலத்திற்கும் காத்திருப்பு

/

கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., தள்ளுபடி, புது ரயில் பாதைபட்ஜெட்டில் வெளியாகுமா?: சிப்காட், கல்லுாரி, சுற்றுலா தலத்திற்கும் காத்திருப்பு

கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., தள்ளுபடி, புது ரயில் பாதைபட்ஜெட்டில் வெளியாகுமா?: சிப்காட், கல்லுாரி, சுற்றுலா தலத்திற்கும் காத்திருப்பு

கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., தள்ளுபடி, புது ரயில் பாதைபட்ஜெட்டில் வெளியாகுமா?: சிப்காட், கல்லுாரி, சுற்றுலா தலத்திற்கும் காத்திருப்பு


ADDED : ஜன 22, 2025 01:04 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: மத்திய - மாநில அரசுகள் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை இம்முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா என்ற எதிர்பார்ப்புடன், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.

மத்திய - மாநில அரசுகள் தங்களது பட்ஜெட் அறிக்கையை, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறது. அந்த வகையில், 2025 - 26ம் ஆண்டுக்கான வரவு - செலவு அறிக்கையை அடுத்த சில நாட்களில் இரு அரசுகளும் தாக்கல் செய்ய உள்ளன.

மத்திய அரசை பொறுத்தவரை வருமான வரி, தனிநபர் வரி உள்ளிட்ட வரி விகிதங்களில், எந்த அளவுக்கு மாற்றம் இருக்கும் என, பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம், தங்களது ஊருக்கு எந்த வகையிலான புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் கிடைக்கும் என, சாமானிய மக்கள் பலர் பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மாநில அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டையும், அதில் வரக்கூடிய புதிய திட்டங்கள் வாயிலாக, நேரடியாக எந்த வகையில் நாம் பயனடைய உள்ளோம் என்ற எதிர்பார்ப்பை எதிர்பார்த்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு அறிவிப்புகள் பொதுவாக வெளியிட்டாலும், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேவை அறிந்து தனி அறிவிப்பாகவும் மத்திய - மாநில அரசுகள் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடுகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக கேட்கப்படும் திட்டங்கள், கிடப்பில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை, இம்முறை பட்ஜெட்டில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசை பொறுத்தவரை, தி.மு.க.,வின் நிறுவனர் அண்ணாதுரையின் பிறந்த ஊர் என்பதால், இம்முறை முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசை பொறுத்தவரையில், காஞ்சிபுரம் ஆன்மிக நகரம் என்பதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கி, கவனம் செலுத்துவர் என பக்தர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு விபரம்:

* காஞ்சிபுரம் பாலாற்றில் வெங்குடி, விஷார் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட நீர்வள ஆதாரத்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பி பல ஆண்டுகளாகிறது. நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

* உத்திரமேரூர் தாலுகாவில் தொழிற்சாலைகள் அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக திருப்புலிவனம் பகுதியில் சிப்காட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக எதிர்பார்க்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சுற்றுலா தலங்கள் இல்லை. சுற்றுலா துறை சார்பில், ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை அமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* வாலாஜாபாத் - காஞ்சிபுரம் இடையேயான பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு, உத்திரமேரூர் போன்ற இடங்களுக்கு நீண்ட துாரம் பயணித்து, கல்லுாரி செல்ல வேண்டிய நிலை மாணவர்களுக்கு தொடர்கிறது.

* காஞ்சிபுரத்தில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் நெய்யப்படும் பட்டு சேலைகளுக்கு ரிபேட் எனப்படும், கழிவு தொகை, 40 ஆண்டுகளுக்கு மேலாக 200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றை உயர்த்தி, சிறிய சேலைகளுக்கு 500 ரூபாயும், பெரிய சேலை ரகங்களுக்கு 1,000 ரூபாயும் வழங்க வேண்டும்.

* சென்னை மாநகர போக்குவரத்து எல்லை, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் வரை ஏற்கனவே உள்ளது. இவற்றை, காஞ்சிபுரம் வரை நீட்டித்து, பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு விபரம்:

* ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் மேலாகிறது. கடந்த 2023ல், 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட பின், நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. இம்முறை கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

* காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் கைத்தறி பட்டு சேலைகள் கைகளால் நெய்யப்படுகிறது. கைவினை பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி தள்ளுபடி உள்ள நிலையில், கைத்தறி சேலைகளுக்கு ஜி.எஸ்.டி., வரியில் விலக்களிக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

* காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு போன்ற ஊர்களுக்கு கூடுதலாக ரயில் சேவையை வழங்க வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

* காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையேயான நீண்டகால கோரிக்கையாக உள்ள இரட்டை ரயில் பாதையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

* காஞ்சிபுரம் - செய்யாறு புதிய ரயில் பாதை அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்

* நாட்டின் 12 பாரம்பரிய நகரங்களுள் காஞ்சிபுரம் ஒன்று என்பதாலும், கோவில்கள் நிறைந்துள்ளதாலும், மத்திய சுற்றுலா துறை சார்பில், அனைத்து கோவில்களுக்கும் பக்தர்களை இலவசமாக அழைத்து செல்லும் பேருந்து சேவை, குறைவான கட்டணத்தில் தங்கும் விடுதி, மல்டி லெவல் பார்க்கிங் வசதி போன்றவை அமைக்க வேண்டும்.

* மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், காஞ்சியில் ஏழு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவில்கள் பெயர் விபரம் அடங்கிய பதாகை கூட இக்கோவில்களில் இல்லை

* காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், காஞ்சிபுரத்தை அறிவிக்க வேண்டும். நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

* காஞ்சிபுரம் ரயில் நிலையம் 'அம்ரித் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், மத்திய ரயில்வே துறை தேர்வு செய்து, ரயில் நிலையத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us