/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் அமையுமா?
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் அமையுமா?
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் அமையுமா?
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் அமையுமா?
ADDED : டிச 07, 2024 01:15 AM
வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்கு செங்கல்பட்டு அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக கர்ப்பிணியர் கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.
மேலும், பழையசீவரம் எதிர்புற கரையில், பாலாற்றங்கரையை ஒட்டி பல்வேறு கிராமங்கள்உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தோரும், அவசர நேரங்களில் பழையசீவரம் வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் உள்ள அரசு அல்லது தனியார்மருத்துவமனைக்குசெல்கின்றனர்.
இதனால், பழையசீவரத்தை சுற்றியுள்ள பல கிராம மக்களும் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல், பல்வேறு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
எனவே, பழையசீவரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.