/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை தீவிரமடையும் முன் சாலைகள் சீரமைக்கப்படுமா?
/
பருவமழை தீவிரமடையும் முன் சாலைகள் சீரமைக்கப்படுமா?
பருவமழை தீவிரமடையும் முன் சாலைகள் சீரமைக்கப்படுமா?
பருவமழை தீவிரமடையும் முன் சாலைகள் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 19, 2024 02:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 4 மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இந்த அனைத்து தெருக்களிலும், 318 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த புதிய திட்டத்திற்காக, மாநகராட்சியில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடக்காது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.
இதனால், மோசமான நிலையில் உள்ள சேதமான சாலைகளை சீரமைக்கவேண்டும் என, கவுன்சிலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஆனால், மாநகராட்சியின் பல தெருக்களில் உள்ள தார் சாலைகள், சிமென்ட் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
பிள்ளையார்பாளையம் பகுதியில் 11வது வார்டில் உள்ள நடுத்தெருவில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இவ்வழியே பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
அடுத்த மூன்று மாதங்கள் மழைக்காலம் என்பதால், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஏற்கனவே, மண்டப தெரு, அண்ணா பூங்கா சாலை, கிருஷ்ணன் தெருவில் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நடுத் தெருவில் உள்ள மோசமானசாலை உட்பட, மாநகராட்சியின் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.