/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபினாயூர் மயான பாதை நிறுத்திய பணிகள் துவங்குமா?
/
சிறுபினாயூர் மயான பாதை நிறுத்திய பணிகள் துவங்குமா?
சிறுபினாயூர் மயான பாதை நிறுத்திய பணிகள் துவங்குமா?
சிறுபினாயூர் மயான பாதை நிறுத்திய பணிகள் துவங்குமா?
ADDED : மார் 14, 2024 11:37 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் காலனி பகுதிக்கான மயானம் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ளது. மயானத்திற்கான பாதை மிகவும் குறுகியதாகவும், மண் பாதையாகவும் இருந்து வருகிறது.
இதனால், மழைக்காலங்களில் பாதையில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. அச்சமயங்களில் உயிர் நீத்தோர் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், இந்த மண் பாதையை சிமென்ட் சாலையாக சீரமைக்க அப்பகுதியினர் கோரி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அப்பகுதி மயானத்திற்கு பாதை அமைக்க ஊராட்சி ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கையின்படி, முதற்கட்டமாக மயானப் பாதையில் 3 லட்சம் ரூபாய் செலவில் சிறுபாலம் அமைக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
அப்போது, சிறுபாலம்அமைக்கும் இடம், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலமென்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பணி நிறுத்தம் செய்யப்பட்டது.
அதையடுத்து, இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை ஏதும் இல்லாமல் சிறுபாலம் மற்றும் மயானத்திற்கான பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு சிறுபினாயூர் காலனி மயானத்திற்கான பாதை மற்றும் சிறுபாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

