/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேண்பாக்கம், மதுரப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை அமையுமா?
/
வேண்பாக்கம், மதுரப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை அமையுமா?
வேண்பாக்கம், மதுரப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை அமையுமா?
வேண்பாக்கம், மதுரப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை அமையுமா?
ADDED : பிப் 02, 2025 07:12 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேண்பாக்கம் ஊராட்சி. இப்பகுதயில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கட்டடம் சில ஆண்டுகளாக பழுதடைந்து, பலவீனமாகி வருகிறது.
மேலும், கட்டடத்தின் மேல்தளம் சிதிலமடைந்துள்ளதால், மழைக்காலங்களில் ரேஷன் கடை உள்ளே மழைநீர் சொட்டும் நிலை உள்ளது. அச்சமயங்களில், ரேஷன் பொருட்களை இருப்பு வைத்து, பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதேபோல், வேண்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன மதுரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, வேண்பாக்கம் மற்றும் சின்ன மதுரப்பாக்கம் கிராமங்களில் பழுதான ரேஷன் கடைகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.