/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆபத்தான சாலை வளைவில் வேகத்ததடை அமையுமா?
/
ஆபத்தான சாலை வளைவில் வேகத்ததடை அமையுமா?
ADDED : ஜன 26, 2025 01:25 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த அவளூரில் இருந்து, கண்ணடியன் குடிசை வழியாக தம்மனூர் செல்லும் சாலை உள்ளது. கணபதிபுரம், தம்மனூர், காவந்தண்டலம், இளையனார்வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், கண்ணடியன்குடிசை அருகே அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதி குறித்து எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.
எனவே, ஆபத்தான சாலை வளைவு பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.