/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாரஸ் லாரி மோதி விபத்து பெண் பலி; முதியவர் காயம்
/
டாரஸ் லாரி மோதி விபத்து பெண் பலி; முதியவர் காயம்
ADDED : ஜன 26, 2025 08:09 PM
ஸ்ரீபெரும்புதுார்,:ஒரகடம் அடுத்த பண்ருட்டி அருகே உள்ள எச்சூர் கிராமம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 42; கூலி தொழிலாளி. இவரது மனைவி எல்லம்மாள், 37. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று மதியம் பாபு, மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பண்ருட்டியில் இருந்து வாலாஜாபாத் நோக்கி நடந்து சென்றார். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், குண்ணவாக்கம் அருகே வந்த போது, அதிவேகமாக வந்த டாரஸ் லாரி எல்லம்மாள் மற்றும் சைக்கிளில் சென்ற பிரகாசம், 65, மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட எல்லம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரகாசத்திற்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், எல்லம்மாவின் கணவர் மற்றும் மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தகவலறிந்து வந்த ஒரகடம் போலீசார், காயமடைந்த பிரகாசத்தை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எல்லம்மாவின் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரி ஒட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் ஜல்லிக் கற்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகளால், ஒரகடம் காவல் எல்லையில் அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

