/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மகளிர் குழுக்கள் துவக்குவது அதிகரிப்பு
/
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மகளிர் குழுக்கள் துவக்குவது அதிகரிப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மகளிர் குழுக்கள் துவக்குவது அதிகரிப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மகளிர் குழுக்கள் துவக்குவது அதிகரிப்பு
ADDED : ஏப் 23, 2025 07:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நகராட்சிகள். உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகள் இயங்கி வருகின்றன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சிகளில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் என அழைக்கப்படும் மகளிர் திட்டத்தின் வாயிலாக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்து, புதிய மகளிர் குழுக்களை உருவாக்குகின்றனர்.
அவர்களுக்கு, தொழில் துவங்க கடனுதவி உள்ளிட்ட பல்வேறு விதமான முன்னேற்றங்களை மகளிர் திட்டத்தினர் செய்து கொடுத்து வருகின்றனர்.
அதன்படி, மூன்று நிதி ஆண்டுகளில், மகளிர் திட்டத்தினர் நிர்ணயம் செய்யும் இலக்கினை அத்துறையினர் எட்டி வருகின்றனர். இதன் வாயிலாக, கடனுதவி உள்ளிட்ட தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தும் வருகின்றனர்.
குறிப்பாக, 2021- - 22ம் நிதி ஆண்டில் 160 மகளிர் குழுக்கள் துவக்க இலக்கு நிர்ணம் செய்யப்பட்டது. இதில், 330 மகளிர் குழுக்கள் துவக்கப்பட்டு உள்ளன. அதேபோல, 2022 - -23ம் நிதி ஆண்டில், 250 மகளிர் குழுக்கள் துவக்க இலக்கு நிர்ணயம் செய்தனர். இதில், 266 மகளிர் குழுக்கள் துவக்கப்பட்டு உள்ளன.
மேலும், 2023- - 24ம் நிதி ஆண்டில், 200 மகளிர் குழுக்கள் துவக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டன. இதில், 214 மகளிர் குழுக்கள் துவக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024 - -25ம் நிதி ஆண்டில், 183 மகளிர் குழுக்கள் துவக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டன. இதில், 187 மகளிர் குழுக்கள் துவக்கப்பட்டு உள்ளன.
இதுபோல, ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யும் இலக்கை விட கூடுதலாக துவக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.