/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஆக 04, 2025 11:38 PM

காஞ்சிபுரம், கா ஞ்சிபுரம் கவரைத் தெருவில் இயங்கும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன் , தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர், நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு செ யலர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள நடப்பு, சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகையை, எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும் என, போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், விவசாய கடன் பெறுவோருக்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகளை புதுப்பித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஆக., 10ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை துவக்க, கூட்டுறவு சங்கங்கள் முடிவு செய்துள்ளன.