/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 11, 2025 10:42 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-- 2025ம் ஆண்டு, 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவங்கப்பட உள்ளது.
காஞ்சி மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ விடுத்துள்ள அறிக்கை:
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் மட்டுமே இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 16 முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம், அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 044- 27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.