/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ- -வீலர் திருடிய வாலிபர் கைது
/
டூ- -வீலர் திருடிய வாலிபர் கைது
ADDED : டிச 22, 2024 12:40 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முகமதுயாசின், 19. சேக்குப்பேட்டை பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார்.
இவர், தன் இருசக்கர வாகனத்தை, சில நாட்கள் முன் சாலை தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதுபற்றி அவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ள மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்த இர்பான், 22. என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.