/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு
/
மறைமலை நகர் டாஸ்மாக்கில் வாலிபர் மண்டை உடைப்பு
ADDED : மார் 05, 2024 04:03 AM
மறைமலை நகர், : மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மதிவேந்தன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரகாஷ், 34, என்பவருடன், மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி, அருகில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அதே பாரில் இருந்த நான்கு பேர், பிரகாஷ் மற்றும் மதிவேந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டனர்.
அப்போது, அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து, மதிவேந்தனின் முன்பக்க தலையில் அடித்ததில், அவர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பொத்தேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, மருத்துவமனை அளித்த தகவலின்படி, மறைமலை நகர் போலீசார் நடத்திய விசாரணையில், மதிவேந்தனை தாக்கியவர்கள், பாரில் பணிபுரியும் பணியாளர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

