/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பாலாற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்
/
வாலாஜாபாத் பாலாற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்
வாலாஜாபாத் பாலாற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்
வாலாஜாபாத் பாலாற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்
ADDED : அக் 25, 2025 11:40 PM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் துாண்டில் போட்டு மீன் பிடிக்கும் பணியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் துவங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க பரவலாக கனமழை பெய்து வருகிறது. சில நாட்களாக பாலாற்று படுகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், வாலாஜாபாத் பாலாற்றின் அவளூர் தரைப்பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் அவளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆற்றங்கரையோரம் மற்றும் தரைப்பாலம் மீது நின்று காலை முதல், மாலை வரை துாண்டில் போட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலாற்றில் ஜிலேபி மற்றும் ெகண்டை மீன்கள் அதிக அளவில் கிடைப்பது அவர்களது ஆர்வத்தை மேலும் அதிகரித்து உள்ளது.
ஆற்றில் பிடிக்கும் மீன்களை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
இதனால், இளைஞர்கள் பலரும் ஆர்வம் மிகுதியால் கூட்டம், கூட்டமாக வந்து துாண்டில் போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

