sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

குமரியில் குடும்ப சுகாதார திருவிழா கலெக்டர் துவக்கி வைத்தார் : 14 நாட்கள் நடக்கிறது.

/

குமரியில் குடும்ப சுகாதார திருவிழா கலெக்டர் துவக்கி வைத்தார் : 14 நாட்கள் நடக்கிறது.

குமரியில் குடும்ப சுகாதார திருவிழா கலெக்டர் துவக்கி வைத்தார் : 14 நாட்கள் நடக்கிறது.

குமரியில் குடும்ப சுகாதார திருவிழா கலெக்டர் துவக்கி வைத்தார் : 14 நாட்கள் நடக்கிறது.


ADDED : ஜூலை 12, 2011 12:30 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 14 நாள் நடக்கும் குடும்ப சுகாதார திருவிழா துவக்க விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் துவக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1987 ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினம் என அறிவித்தது. உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பெற ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 1952ம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக குடும்ப நலத்திட்டத்தை ஒரு தேசிய திட்டமாக அறிவித்தது இந்திய அரசு.

2.10.1999ல் உலக மக்கள் தொகை 600 கோடியை தாண்டியது. 11.5.2000ல் இந்திய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது. உலக மக்கள் எண்ணிக்கையில் 6 பேரில் ஒருவர் இந்தியர் என்ற விகிதாச்சாரம் தற்போது உள்ளது. இந்நிலை உயரும் போது மனித வாழ்க்கை தரம் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்விற்கு அடிப்படை தேவையான உறைவிடம், உணவு, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சமுதாயத்தில் பிரச்னையின்றி வாழ்வு கிடைக்க வேண்டுமானால் ஒரே வழி மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுதான். இதை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் மக்கள் தொகையை நிலைப்படுத்த குடும்ப சுகாதார திருவிழா 14 நாட்கள் நடத்தப்படுகிறது.

குடும்ப சுகாதார திருவிழா நாட்களில் தக்கலை அரசு தலைமை ஆஸ்பத்திரி, குழித்துறை, குளச்சல், பூதப்பாண்டி ஆகிய நான்கு இடங்களிலும் குடும்ப நல ஆலோசனை மற்றும் கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகிறது.

குடும்ப சுகாதார திருவிழாவின் துவக்க விழா நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அருண்மொழி முன்னிலை வகித்தார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராஜகோபால் வரவேற்றார். பழனியாபிள்ளை விழிப்புணர்வு பாடல் பாடினார்.

குடும்ப சுகாதார திருவிழா குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ பணிகள், சுகாதாரப்பணிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு மக்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடிகிறது. மக்கள் தொகை பெருக்கும் அதிகமாக இருப்பதால் குடும்ப கட்டுப்பாடு மற்றும் குடும்ப நலம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படுகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு ஒருவர் என மக்கள் தொகை குறித்து பிரசாரம் செய்தாலும், நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. 2க்கு மேல் வேண்டாம். ஒன்று இருந்தால் போதும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் பிறப்பு விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது. என்றாலும் இந்த குடும்ப சுகாதார திருவிழாவில் தக்கலை, குளச்சல், குழித்துறை, பூதப்பாண்டி ஆகிய நான்கு இடங்களிலும் சிறப்பு மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களில் குடும்ப கட்டுப்பாடு முறைகள் குறித்தும், என்னென்ன முறைகள் யாருக்கு ஒத்துவரும் என்பது குறித்தும் விளக்கப்படும். மேலும் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படும். எனவே குமரி மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஸ்ரீராம்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், ஆயுர்வேத மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ராமகிருஷ்ணன ஆச்சாரியர், சகா அருள்ராஜ், ராம்குமார், மணிகண்டன், அருள்கண்ணன், வட்டார விரிவாக்க கல்வியாளர் விமலநாதன் பேசினர். புள்ளியல் உதவியாளர் முகமது சலாகுதீன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us