/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கருங்கல்லில் ரூ.30 கோடி மோசடி நிதி நிறுவனத்தில் 3 பேர் கைது
/
கருங்கல்லில் ரூ.30 கோடி மோசடி நிதி நிறுவனத்தில் 3 பேர் கைது
கருங்கல்லில் ரூ.30 கோடி மோசடி நிதி நிறுவனத்தில் 3 பேர் கைது
கருங்கல்லில் ரூ.30 கோடி மோசடி நிதி நிறுவனத்தில் 3 பேர் கைது
ADDED : ஆக 30, 2024 02:54 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் மாமூட்டுக்கடையை சேர்ந்தவர் ஆனந்தராஜன், 40. இவர், கருங்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதிக வட்டி தருவதாக கூறியதால், ஏராளமானோர் இவரிடம் முதலீடு செய்தனர். மேலச்சங்கரன் குழியைச் சேர்ந்த மணிகண்டன், 46, இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தார். வட்டி உரிய காலத்தில் கிடைக்காததால், பணத்தை திருப்பிக்கேட்ட போது கொடுக்காமல், ஆனந்தராஜன் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.
மணிகண்டன், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். விசாரணை துவங்கிய போது, அடுத்தடுத்து பலரும் அந்த நிதி நிறுவனம் மீது புகார்களை தெரிவித்தனர். தொடர்ந்து, ஆனந்தராஜன் தலைமறைவானார். நேற்று வரை, 83 பேர் புகார் செய்தனர். 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
இவ்வழக்கில், ஆனந்தராஜனின் தந்தை சுந்தரராஜன், அவரது தம்பி அனீஷ்ராஜன், நிதி நிறுவன மேலாளர் அனீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் அரவிந்தராஜன், நேசியா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.