/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 63 வயது மத போதகர் கைது: மனைவி, மகன் சிக்கினர்
/
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 63 வயது மத போதகர் கைது: மனைவி, மகன் சிக்கினர்
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 63 வயது மத போதகர் கைது: மனைவி, மகன் சிக்கினர்
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 63 வயது மத போதகர் கைது: மனைவி, மகன் சிக்கினர்
ADDED : பிப் 24, 2025 02:51 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 63 வயது கிறிஸ்தவ மத போதகர் ஜான் ரோஸ், அவரது மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்திவிளையைச் சேர்ந்தவர் ஜான் ரோஸ் 63. இவர் பெருஞ்சிலம்பு கரும்பாலை பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெபம் நடத்த வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி மற்றும் 13 வயது மகளும் அடிக்கடி இங்கு ஜெபம் நடத்த வந்துள்ளனர். சிறுமி மதபோதகர் வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது.
சிறுமியிடம் விசாரித்த போது போதகர் ஜான் ரோஸ் செய்த கொடுமைகளை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது அவர்களை மிரட்டிய ஜான் ரோஸ் கேரள மாநிலம் கொல்லத்துக்கு அழைத்து சென்று சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துஉள்ளார். இதுகுறித்து டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஜான் ரோஸ் தலைமறைவானார்.
கேரள போலீசார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ஜான் ரோஸ், அவரது மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.
சிறுமி சில நாட்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.