/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ராஜஸ்தான் ஆடுகளை மாற்றியதாக டிரைவரை தாக்கியோர் மீது வழக்கு
/
ராஜஸ்தான் ஆடுகளை மாற்றியதாக டிரைவரை தாக்கியோர் மீது வழக்கு
ராஜஸ்தான் ஆடுகளை மாற்றியதாக டிரைவரை தாக்கியோர் மீது வழக்கு
ராஜஸ்தான் ஆடுகளை மாற்றியதாக டிரைவரை தாக்கியோர் மீது வழக்கு
ADDED : ஜூலை 31, 2024 09:35 PM
நாகர்கோவில்:ராஜஸ்தான் மாநிலம், கத்துக்கப்பாடியா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் சிங், 52; லாரி டிரைவர். அங்கு அஜ்மிஸ் மாவட்டம், மண்டல வாரியார் பகுதியில் ராஜு என்பவரின் ஆட்டுப் பண்ணையிலிருந்து ஜூலை 16ல் லாரியில் 230 ஆட்டுக்கிடா மற்றும் ஐந்து பெண் ஆடுகளுடன், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ள வாடிவிளைக்கு புறப்பட்டார். லாரி கிளீனராக சன்வரலால் என்பவரும், ஆடுகளை பராமரிக்க மூன்று பேரும் உடன் வந்தனர்.
மதுரையில் ஆடுகளை இறக்கி பராமரித்த பின்னர், இதற்காக வந்திருந்த மூன்று ஊழியர்களும் மாயமாகிவிட்டனர். இந்நிலையில், வாடிவிளையில் ஆடுகளை இறக்கிய போது, அது ராஜஸ்தான் ஆடுகள் அல்ல என்றும், அந்த ஆடுகளை விற்றுவிட்டு, வேறு ஆடுகளை கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, ஆடு ஆர்டர் செய்தவர்கள், டிரைவர் சுரேந்தர் சிங், கிளீனர் சன்வர்லாலை, தனி அறையில் அடைத்து வைத்து தாக்கினர்.
சுரேந்தர் சிங் அவர்களிடம் தப்பி இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சன்வர்லாலை மீட்டனர். இது தொடர்பாக, மாங்கரையைச் சேர்ந்த ஜோசப் ராஜா, மாங்குழியை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.