/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ரவுடியை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு வெட்டு
/
ரவுடியை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு வெட்டு
ADDED : ஆக 23, 2024 02:38 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி கொலை வழக்கு கைதியை பிடிக்க முயன்ற எஸ்.ஐ., முத்துகிருஷ்ணனுக்கு வீச்சரிவாளால் வெட்டு விழுந்தது. அவரது சீருடையும் கிழிந்தது. இருப்பினும் ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே முக்கலம்பாட்டை சேர்ந்தவர் அஜின் ஜோஸ் 27. ரவுடியான இவர் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொலை வழக்கு ஒன்றில் அருள் ஜோஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு இரணியன் நீதிமன்றத்தில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குந்தன்கோடு அம்மன் கோயில் அருகே அஜின்ஜோஸ் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அஜின் ஜோஸ் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் பிடிக்க முயன்ற எஸ்.ஐ., முத்து கிருஷ்ணனை வெட்ட முயற்சி செய்தார். இதில் எஸ்.ஐ.,க்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் அவரது சீருடையும் கிழிந்தது. இருப்பினும் போலீசார் சுற்றிவளைத்து அஜின்ஜோசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
2019 முதல் ரவுடி பட்டியலில் அஜின் ஜோஸ் பெயர் உள்ளது. இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

