/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பாலியல் புகார்: பள்ளியில் குழு விசாரணை
/
பாலியல் புகார்: பள்ளியில் குழு விசாரணை
ADDED : செப் 01, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கோணத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது.
இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவில் வந்தனர்.
அவர்கள் பள்ளியில் தலைமை ஆசிரியரிடமும், மாணவ மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். இது தொடர்பான அறிக்கை மத்திய அரசின் கல்வி அமைச்சகத்திடம் அளிக்கப்பட உள்ளது.