/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் சென்னை சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு
/
குமரியில் சென்னை சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு
குமரியில் சென்னை சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு
குமரியில் சென்னை சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு
ADDED : மே 16, 2025 11:48 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தனியார் நிறுவன ஊழியர் அழகிய நம்பி 56. சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தனர். திருமணத்தில் பங்கேற்ற பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரை காந்தி மண்டபம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர். திரும்பி வந்த போது காரில் இருந்த கைப்பையை காணவில்லை. அதில் 15 பவுன் நகைகள், ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரமாகும். அழகிய நம்பி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அழகிய நம்பி அவசரத்தில் கார் கதவை லாக் செய்யாமல் சென்றதை கவனித்து மர்மநபர்கள் கைப்பையை திருடியது தெரிந்தது.