/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கன்னியாகுமரி மாவட்டத்தின் 68வது ஆண்டு தினம் கொண்டாட்டம்
/
கன்னியாகுமரி மாவட்டத்தின் 68வது ஆண்டு தினம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் 68வது ஆண்டு தினம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் 68வது ஆண்டு தினம் கொண்டாட்டம்
UPDATED : நவ 02, 2024 07:33 AM
ADDED : நவ 02, 2024 02:40 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 68 வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.
திருவிதாங்கூருடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத திருவிதாங்கூர் பட்டம் தாணுபிள்ளை அரசு போராட்டக்காரர்களைகடுமையாக அடக்கியது.
அந்த காலகட்டத்தில் திருவனந்தபுரத்திலிருந்து தினமலர் நாளிதழை வெளியிட்ட நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தினமலரில் செய்திகள் வெளியிட்டார். இதனால் பல்வேறு அடக்கு முறைகளை அவர் சந்திக்க நேரிட்டும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் தொடர்ந்து செய்திகள் வெளியானது.
போராட்டம் பற்றிய செய்திகள் தினமலரில் மட்டுமே வந்ததால் அந்த நாளிதழை விற்பனையாகாமல் தடுக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் பல்வேறு யுக்திகளை கையாண்டு அந்தந்த இடங்களில் சேர்த்தார்.
ஒருவர் நாளிதழை வாங்கி பனை மரத்தில் ஏறி இருந்து அன்றைய தினம் எங்கெல்லாம் போராட்டம் நடக்கிறது என்று படித்து சொல்வார். அதைக்கேட்டு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கு கலந்து கொள்வர். இதனால் தினமலருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் 'பனைமலர்' என்ற செல்லப் பெயரும் உண்டு.
துப்பாக்கிச் சூடு மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களுக்கிடையில் கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவ. 1 ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் 68வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய மாஸ்டர் நேசமணி சிலைக்கு அரசு சார்பில் கலெக்டர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர்.