/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாப பலி
/
காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாப பலி
ADDED : மார் 10, 2024 01:06 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், அருமனை, ஆறுகாணி அருகே நுாறாம் வயலில் கீழ் மலை வீடு என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் மது, 26; கூலித்தொழிலாளி.
இவர் வசித்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் செல்லும் கால்வாயில், சிறிய குழாய் வாயிலாக குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் குழாயில் தண்ணீர் வராததால், அதை பார்க்க மது மற்றும் நண்பர்கள் மூவர் மலைப்பகுதிக்கு சென்றனர்.
அங்கு காட்டு யானை கூட்டம் நிற்பதை பார்த்து அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இரண்டு பேர் தப்பி விட்டனர். யானை துதிக்கையால் மதுவை துாக்கி வீசி மிதித்துக் கொன்றது. அங்கு சென்ற வனத்துறையினர் யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்டினர்.
இதற்கிடையே, விலங்குகளிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். மதுவின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் உடனடியாக, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.

