/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கோயிலில் சிலை உடைப்பு; போலீசுக்கு பயந்து தற்கொலை
/
கோயிலில் சிலை உடைப்பு; போலீசுக்கு பயந்து தற்கொலை
ADDED : பிப் 04, 2025 03:26 AM
நாகர்கோவில் : குமரி மாவட்டம் தக்கலை அருகே வியன்னூரில் சுந்தர் என்பவர் இசக்கியம்மன் கோயில் வைத்துள்ளார். இவரது சகோதரர் கிருஷ்ணனுடன் சொத்துப் பிரச்னை உள்ளது. டிச.25-ல் கிருஷ்ணனின் மகன் சஜின் கோயிலில் புகுந்து சுந்தரை தாக்கியதோடு அங்கிருந்த சுவாமி சிலைகளையும் சேதப்படுத்தினார்.
சஜின் ஜாமினில் வெளிவந்த பின் ஜன.29-ம் தேதி தனது நண்பர்களுடன் கம்பி, கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் வந்து மீண்டும் சுவாமி சிலைகளை சேதப்படுத்தினர். இது தொடர்பாக சஜின் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ராஜ், மோகன்ராஜ், விபின் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
மூன்றாவது முறையாக மீண்டும் சஜின் கோயிலுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சஜினை பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த நண்பர் மோகன்ராஜ் 42, மருதூர்குறிச்சியில் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி சந்தியா புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.