/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சென்னை டாக்டர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
/
சென்னை டாக்டர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
ADDED : ஏப் 10, 2025 06:59 AM
நாகர்கோவில் : நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சிங், 52. பல் டாக்டரான இவர் கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தார்; திருமணம் ஆகவில்லை.
நீண்ட காலமாக சென்னையில் இருந்த அவர், சென்னையிலிருந்து, நாகர்கோவில் வந்து, அங்குள்ள நீதிமன்றம் எதிரே உள்ள தன் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், அருண் சிங் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இது பற்றி வடசேரி போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது சோபாவில் இறந்த நிலையில் அருண் சிங் காணப்பட்டார்.
அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருண் சிங்கின் அண்ணி, மினி கொடுத்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

