/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தீக்குளிக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ்., காங்., தலைவர் சர்ச்சை பேச்சு
/
தீக்குளிக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ்., காங்., தலைவர் சர்ச்சை பேச்சு
தீக்குளிக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ்., காங்., தலைவர் சர்ச்சை பேச்சு
தீக்குளிக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ்., காங்., தலைவர் சர்ச்சை பேச்சு
ADDED : மார் 05, 2024 11:12 PM
நாகர்கோவில்:கணவன் இறந்தால் பெண்களை தீக்குளிக்க வேண்டும், பூ வைக்க கூடாது பொட்டு வைக்க கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்., தீட்டிய திட்டம் என அகில இந்திய மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்த உலக மகளிரணி மாநாட்டில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.
அவர் பேசியதாவது:
குமரியில் 40 ஆண்டுகள் தோள்சீலை போராட்டம் நடந்தது. அதில் பழமை வாதிகளை வென்று புதுமை புகுத்தியது. மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராடினார்கள்.
பாவிகளின் வாரிசுகள்
சதி என்ற உடன்கட்டை ஏறுதலை கொண்டுவந்த படுபாவிகளின் வாரிசுகள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்து பெரிய போராட்டத்தை துவங்கியது.
உடனடியாக உடன்கட்டை ஏறுவதும், அதை கட்டாயப்படுத்துவதும் குற்றம் என ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டுவந்தார்கள்.
பெண்கள் பச்சை மையில் கையெழுத்திடவேண்டும் என பஞ்சாயத்து ராஜ் கொண்டுவந்து பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொனடுவந்தவர் ராஜிவ்.
ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வார்கள், பெண்கள் வேலைக்குச் செல்வார்கள் என்ற தகவல் சங்க இலக்கியத்தில் உள்ளது.
ஆனால், இந்துத்துவாவை புகுத்தி கணவன் இறந்தால் பெண்கள் தீக்குளிக்க வேண்டும், பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, தரையில் படுக்க வேண்டும் என மாற்றினார்கள். இதெல்லாம் நாக்பூரை மையமாகக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீட்டிய திட்டம்.
ராமாயணத்தில் ராமன் சீதையை அக்னி பிரவேசம் செய்யச்சொன்னார். சீதை ராமனை மன்னித்துவிட்டார். நளன் தமயந்தியை நடுக்காட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தமயந்தி நளனை மன்னித்துவிட்டார்.
பெண்களை மதிப்பர்
கோவலன் கண்ணகியை ஏமாற்றினார், கண்ணகி மன்னித்தார். பஞ்சாலி துகிலுரியப்பட்டார், அடகுவைத்த தர்மனை மன்னித்தார். ஆனால் ஆண்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள்.
வடமாநிலத்தில் காளியை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் அவர் அநீதியை எதிர்த்து கொலை செய்தாராம்.
அநீதியை எதிர்த்து போராடினால்தான் பெண்களை மதிப்பார்கள். இப்போது இடைத்தேர்தல் வரப்போகிறது. அதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது விளவங்கோடு தொகுதியில் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

