/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காசிக்கு மூன்றாண்டுகள் சிறை கந்து வட்டி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : ஜன 04, 2025 11:13 PM
நாகர்கோவில்:சென்னை பெண் டாக்டர் உட்பட பல பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு கந்துவட்டி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர் சென்னை பெண் டாக்டர் உட்பட ஏராளமான பெண்களுடன் பழகி, ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக 2020ல் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தடயங்களை அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியன் மற்றும் காசிக்கு உதவியதாக நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தவிர காசி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டல் உட்பட ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின் இவர் குண்டர்தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்குகள் பின் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
காசி லேப்டாப்பில் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் 1900 நிர்வாண படங்கள் இருந்ததை சி.பி.சி.ஐ.டி.,யினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் காசி மீது பதிவு செய்யப்பட்டிருந்த கந்துவட்டி வழக்கை விசாரித்த நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் காசிக்கு மூன்றாண்டுகள் சிறை, அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை, புரோக்கர் நாராயணனுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்தது.