/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ரகளை செய்தவரை பிடிக்க சென்ற எஸ்.ஐ.,க்கு வெட்டு
/
ரகளை செய்தவரை பிடிக்க சென்ற எஸ்.ஐ.,க்கு வெட்டு
ADDED : அக் 13, 2024 07:22 AM
நாகர்கோவில், : கருங்கல்லில் வாகனங்களை தடுத்து நிறுத்தி கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டவரை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை கத்தியால் வெட்டிய வியாபாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஸ்டேஷனிற்கு உட்பட்ட தொலையாவட்டம் மெயின் ரோட்டில் குறுக்கே ஜீப்பை நிறுத்தி, லாரிகளை தடுத்து கண்ணாடிகளை ஒருவர் உடைப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., பென்சாம் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அவரை பிடிக்க முயன்ற போது தனது வாகனத்தில் இருந்த வெட்டுக்கத்தியை எடுத்து எஸ்.ஐ.,யை வெட்டினார்.
இதில் அவருக்கு வலது தோள்பட்டை மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த எஸ்.ஐ., பென்சாம் கருங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் தொலையா வட்டத்தைச் சேர்ந்த வியாபாரி செல்வராஜ் 58, என்பது தெரியவந்தது. அவரைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.