/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
போதையில் டிரைவர் மினிபஸ் பறிமுதல்
/
போதையில் டிரைவர் மினிபஸ் பறிமுதல்
ADDED : நவ 29, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:நாகர்கோவிலில் டிரைவர் போதையில் இருந்ததால் மினி பஸ்சை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு வாசலில் மினி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். இங்கு பல தனியார் வாகனங்களும் நிறுத்தப்படுவதால் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
நீண்ட நேரம் நின்ற மினி பஸ் டிரைவர் ராஜா சிங்கை போலீசார் விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்தனர்.