/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெண் வருவாய் ஆய்வாளர் துாக்கிட்டு தற்கொலை
/
பெண் வருவாய் ஆய்வாளர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 20, 2025 01:16 AM
நாகர்கோவில்; நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். மஹாராஷ்டிரா மாநில மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யாக வேலை செய்கிறார். இவரது மனைவி வருவாய் ஆய்வாளர் அனிதா, 42. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
நேற்று அனிதா வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இரு குழந்தைகளும் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிய போது கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் குழந்தைகள் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து பார்த்த போது, அனிதா துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். கோட்டாறு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அனிதா சில மாதங்களாக விடுமுறையில் இருந்ததும், குழந்தைகளின் படிப்புக்காக அவர் விடுமுறை எடுத்து கவனித்து வந்ததும் தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாறு போலீசார் விசாரிக்கின்றனர்.