/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் ஒரே நாளில் 4 பேருக்கு குண்டாஸ்
/
குமரியில் ஒரே நாளில் 4 பேருக்கு குண்டாஸ்
ADDED : நவ 09, 2024 11:11 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இம்மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 46 பேர் இச்சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைதானவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துஉள்ளது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்த வாலி என்ற சுயம்புலிங்கம் 38, தூத்துக்குடி செல்வம் 40, நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபு 26, வீரமணி 26,ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். வாலி தூத்துக்குடி மாவட்ட சிறையிலும், செல்வம் திருநெல்வேலி சிறையிலும், பிரபு, வீரமணி ஆகியோர் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சமீபத்தில் எஸ்.ஐ.,யை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இவர் மீது 6 கொலை உட்பட 28 வழக்குகள் உள்ளன. அக்.,4ல் கைதான வாலி மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.