/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கந்து வட்டி: ஹிந்து தமிழர் கட்சி குமரி மாவட்ட தலைவர் கைது
/
கந்து வட்டி: ஹிந்து தமிழர் கட்சி குமரி மாவட்ட தலைவர் கைது
கந்து வட்டி: ஹிந்து தமிழர் கட்சி குமரி மாவட்ட தலைவர் கைது
கந்து வட்டி: ஹிந்து தமிழர் கட்சி குமரி மாவட்ட தலைவர் கைது
ADDED : ஜன 19, 2025 11:19 PM

நாகர்கோவில் : கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஹிந்து தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சந்தைராஜன் 48, அமைப்பாளர் அம்பிளி கண்ணன் 40, உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான்கடை அசோக்நகரைச் சேர்ந்தவர் அனுஷா 32. ஈத்தாமொழி அருகே நங்கூரம் பிளாவிளையைச் சேர்ந்தவர் சந்தைராஜன் 48. கொரோனா காலத்தில் சந்தைராஜனிடமிருந்து அனுஷா ரூ.ஒரு லட்சம் கடன் வாங்கினார். அதற்கு ரூ.100-க்கு ரூ.8 என்ற அடிப்படையில் மாதம் ரூ.8000 வட்டி வாங்கினார். இதற்காக நிரப்பப்படாத காசோலைகள் மற்றும் எழுதப்படாத பத்திரங்களில் கையெழுத்தும் பெற்றுள்ளார்.
2024 வரை ரூ.4.50 லட்சம் அனுஷா கொடுத்துள்ளார். எனினும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த சந்தைராஜன், அனுஷா வீட்டில் இருந்த காரை எடுத்துச் சென்றார். இது தொடர்பாக அனுஷா கொடுத்த புகாரின் பேரில் சந்தைராஜன், அவரது நண்பர் அம்பிளி கண்ணன், சதீஷ் 41, ராஜேஷ் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தைராஜன், அம்பிளி கண்ணன், சதீைஷ கைது செய்தனர்.