/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கோட்டார் புனித சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
/
கோட்டார் புனித சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
ADDED : டிச 04, 2024 12:30 AM

நாகர்கோவில்:நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் சர்ச் திருவிழா தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சில் நவ., 24 மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் காலை, மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி போன்றவை நடந்தன.
பத்தாம் நாள் விழாவான நேற்று காலை 6:00 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டத்திருப்பலி நடந்தது. இதில் மறை மாவட்ட முதன்மை பணியாளர் சகாய ஆனந்த் அடிகள், சவேரியார் சர்ச் பங்குத்தந்தை பஸ்காலிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர் பவனி நடந்தது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி, மிளகு போன்றவற்றை காணிக்கையாக வழங்கி கும்பிடு நமஸ்காரம் நடத்தினர். தமிழகம், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.