/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மகன் மீது போக்சோ வழக்கு அழைத்து வந்து ஒப்படைத்த தாய்
/
மகன் மீது போக்சோ வழக்கு அழைத்து வந்து ஒப்படைத்த தாய்
மகன் மீது போக்சோ வழக்கு அழைத்து வந்து ஒப்படைத்த தாய்
மகன் மீது போக்சோ வழக்கு அழைத்து வந்து ஒப்படைத்த தாய்
ADDED : ஆக 07, 2025 02:54 AM
கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, 16 வயதில் மகள் உள்ளார். பிளஸ் 1 படித்து விட்டு வீட்டில் இருந்தார். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பழகிய நாகையைச் சேர்ந்த தோழியிடம், சிறுமியின் தந்தை குடிபோதையில், வீட்டில் தகராறு செய்ததை பகிர்ந்தார்.
அவர், தன் வீட்டுக்கு வரும்படி கூறினார். அதை ஏற்று அங்கு சென்று தங்கிய போது, சிறுமியின் நண்பரான தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மார்த்தாண்டம் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
சிறுவன், குமரி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் தாய், குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
சிறுவன் மீது போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்தனர். அதை அறிந்த சிறுவனின் தாய், மகனை நாகையிலிருந்து அழைத்து வந்து, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.