/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மண்டைக்காடு கோயிலில் ஒடுக்கு பூஜை
/
மண்டைக்காடு கோயிலில் ஒடுக்கு பூஜை
ADDED : மார் 13, 2024 01:22 AM

நாகர்கோவில்:மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடுபகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மூன்று கால பூஜைகளும் நடந்தது.
மார்ச் 8ல் ஆறாம் நாள் விழாவில் பெரிய படுக்கை என்ற மகா பூஜை நடந்தது. நேற்று முன்தினம் ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடந்தது. வட்ட வடிவமான வளையத்தில் 60க்கும் மேற்பட்ட தீப்பந்தங்கள்ஏற்றப்பட்டு அதன் நடுவில் பக்தர் நிற்க, அதை பிற பக்தர்கள் தேர் போல் இழுத்துச்சென்றனர். அதன் பின்னால் அம்மனின் பல்லக்கு வாகனம் சென்றது.
நிறைவு நாள் விழாவான நேற்று இரவில் ஒடுக்கு பூஜை நடந்தது. ஒன்பது பானைகளில் உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு அதை வெள்ளை துணியால் மூடி பூஜாரிகள் சுமந்து வந்து அம்மனுக்கு படைத்தனர். இந்த நேரத்தில் சிறம்பம்சமாக நிசப்தம் நிலவியது. விழாவையொட்டி நேற்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

