/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணியர்
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணியர்
பிரேக் பிடிக்காத அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணியர்
பிரேக் பிடிக்காத அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணியர்
ADDED : பிப் 03, 2024 01:28 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் இருந்து மத்திக்கோடு, திங்கள் சந்தை வழியாக நாகர்கோவிலுக்கு '9 ஏ' என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு பஸ் கருங்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
அப்போது திடீரென, 'பிரேக்' பழுதாகி உள்ளதை உணர்ந்த டிரைவர், அதை சரி செய்ய முயன்றும் பலன் கிடைக்காததால், முன்னிருக்கை கம்பியை பலமாக பிடித்துக் கொள்ளும்படி, பயணியரை டிரைவர் கூறினார்; வண்டியை டிரைவர் மெதுவாக ஓட்டிச் சென்றார்.
பின், அவ்வழியாக ரோட்டில் செல்பவர்களிடம் பிரேக் பிடிக்காத விபரத்தை சொல்லி, உதவி கோரினார். பைக்கில் வந்த இளைஞர்கள் சாலையோரம் கிடந்த கற்கள், கட்டைகளை பஸ் டயரின் குறுக்கே போட்டு நிறுத்த முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
சில இளைஞர்கள் பைக்கில் பஸ்சின் முன் பகுதிக்கு சென்று, எதிரே வந்த வாகனங்களை ஒதுக்கி நிறுத்தி உதவினர்.
பின், ரோட்டோரம் இருந்த பஞ்சர் ஒட்டும் கடையிலிருந்து பெரிய டயர்களை துாக்கிப்போட்டு பஸ்சின் வேகத்தை ஓரளவு குறைத்தனர்; பஸ்சை மெதுவாக நிறுத்தினார் டிரைவர்.
அதன் பிறகே பஸ்சில் இருந்த பயணியர் நிம்மதி அடைந்தனர். இதில் யாருக்கும் காயமில்லை.

