/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
திருடுபோன வேன் டோல்கேட் பண பரிவர்த்தனையால் மீட்பு
/
திருடுபோன வேன் டோல்கேட் பண பரிவர்த்தனையால் மீட்பு
ADDED : செப் 10, 2025 03:52 AM
நாகர்கோவில்:டோல்கேட் பரிவர்த்தனையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடு போன வேன் துாத்துக்குடி மாவட்டத்தில் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அரியாம்போடு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரைட் 48. கடந்த 27 ஆண்டுகளாக சுற்றுலா வேன் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வேன் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானது.
இது குறித்துகுலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் டோல்கேட்டில் இவரது வேன் கடந்து செல்வதற்காக பாஸ்ட் ட்ராக் மூலம் இவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட மெசேஜ் வந்தது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட்டிலும், பின்னர் துாத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் டோல்கேட்டிலும் வேன் கடந்த போது இவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.
இது பற்றி அங்குள்ள நண்பர்களுக்கு ஜான் பிரைட் தகவல் கொடுத்தார். அவர்கள் தேடியபோது அந்தோணியார் புரம் டோல்கேட் அருகே வேன் கேட்பாரற்று கிடந்தது. இதை தொடர்ந்து குலசேகரம் போலீசார் அங்கு சென்று வேனை மீட்டு வந்தனர். எனினும் திருடியவர்கள் யார் என்ற விவரம் தெரியவரவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.