/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி காயம்
/
பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி காயம்
ADDED : டிச 22, 2024 02:12 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு நடைபெற்ற நிலையில், பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து அந்த மாணவி திடீரென கீழே குதித்தார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கை, காலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையிலும், பள்ளியிலும் நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். மாலை வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பெற்றோர் சார்பிலோ, பள்ளி நிர்வாகம் சார்பிலோ புகார் தரப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவி கீழே குதித்ததாக மாணவியர் சிலர் கூறினர்.