/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரி இரும்பு வியாபாரியிடம் திருவள்ளூர் தம்பதி மோசடி
/
குமரி இரும்பு வியாபாரியிடம் திருவள்ளூர் தம்பதி மோசடி
குமரி இரும்பு வியாபாரியிடம் திருவள்ளூர் தம்பதி மோசடி
குமரி இரும்பு வியாபாரியிடம் திருவள்ளூர் தம்பதி மோசடி
ADDED : மே 27, 2025 04:57 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இரும்பு வியாபாரியிடம், மலிவு விலைக்கு இரும்பு தருவதாக கூறி, 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருவள்ளூர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே, எட்டமடை கீழகேசவன் புதுாரை சேர்ந்தவர் தீபன்துரை, 44; அழகிய பாண்டிபுரத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு, திருவள்ளூர் மாவட்டம், தெளியூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சரவணன் அந்த பகுதியில், தன் மனைவி அபிராமியுடன் சேர்ந்து பழைய பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். சரவணன் - அபிராமி தம்பதி, தங்களிடம் இரும்பு பொருட்கள் உள்ளதாகவும், அதை சலுகை விலையில் தருவதாகவும் தீபன்துரையிடம் கூறியுள்ளனர். நம்பிய அவர், இரண்டு தவணைகளாக, 32 லட்சம் ரூபாயை சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பணம் கொடுத்த பின்னரும், இரும்பு பொருட்களை அவர்கள் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தீபன்துரை பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.