/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
லேசர் தொழில்நுட்பத்தில் மின்னப்போகிறது வள்ளுவர் சிலை ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைகிறது

ADDED : டிச 01, 2024 01:52 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை, கரையில் இருந்தபடி காண, 11 கோடி ரூபாய் செலவில் ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்க, 2006- - 2011 தி.மு.க., ஆட்சியில், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆனால், அந்த ஆட்சி காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் அத்திட்டத்தை கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், 2025 ஜன., 1ல் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் வெள்ளி விழா நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக கன்னியாகுமரி நகர் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. கிடப்பில் போடப்பட்ட ஒலி, ஒளி காட்சிக் கூடத்தை மீண்டும் செயலுக்கு கொண்டு வர கலெக்டர் அழகு மீனா நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுற்றுலாத் துறையால், 11 கோடி ரூபாய் செலவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இந்த காட்சிக்கூடம் அமைகிறது.
திருவள்ளுவர் சிலையின் உச்சி முதல் பாதம் வரை வண்ண லேசர் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பூம்புகார் போக்குவரத்துக் கழக வளாகத்தில் ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்கும் பணியும் வேகமாக நடக்கிறது.
இங்கு, ஒரே நேரத்தில், 100 பேர் அமர முடியும். திருவள்ளுவர் சிலையை இங்கிருந்து காண்பதுடன் மட்டுமின்றி, திருக்குறள் குறித்த விளக்கங்களும், வாசகங்களும் இந்த காட்சியில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விழாவின் போது முதல்வர் இந்த காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.