/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
இறந்த கணவருடன் 3 நாட்கள் இருந்த மனைவி மருத்துவமனையில் அனுமதி
/
இறந்த கணவருடன் 3 நாட்கள் இருந்த மனைவி மருத்துவமனையில் அனுமதி
இறந்த கணவருடன் 3 நாட்கள் இருந்த மனைவி மருத்துவமனையில் அனுமதி
இறந்த கணவருடன் 3 நாட்கள் இருந்த மனைவி மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஆக 20, 2025 02:49 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இறந்து போன கணவரின் உடல் அருகே சாப்பிடாமல் மூன்று நாட்கள் இருந்த மனைவி மீட்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கருங்கல் அருகே கீழ்குளம் பெரியவிளையைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் 76. இவரது மனைவி சாந்தி 70. குழந்தைகள் இல்லை. இவர்கள் முள்ளங்கினாவிளை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தொடர்ச்சியாக இருவரையும் வீட்டின் வெளியே காண முடியவில்லை. வீட்டு கதவும் திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்த போது கிறிஸ்துதாஸ் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே சாந்தி அழுதபடி அரை மயக்கத்தில் இருந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சென்று கிறிஸ்துதாஸ் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ச்சியாக உணவு சாப்பிடாததால் உடல் சோர்வுற்றிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.