ADDED : பிப் 20, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மனைவி சவுமியா. குழந்தை உள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜேஷ் மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார். 2015ல் சவுமியாவை ராஜேஷ் அரிவாள்மனையால் வெட்டி படுகொலை செய்தார். மார்த்தாண்டம் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.
விசாரணை செய்த குழித்துறை மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா, ராஜேஷுக்கு கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், வரதட்சணை கொடுமைக்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.