/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறுமியுடன் மாயமான தொழிலாளி தற்கொலை
/
சிறுமியுடன் மாயமான தொழிலாளி தற்கொலை
ADDED : ஏப் 24, 2025 03:07 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே 18 வயது நிரம்பாத சிறுமியுடன் மாயமான தொழிலாளி சிறுமியை வீட்டில் கொண்டு விட்டபின் குடும்ப கோயிலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள் சந்தை அருகே ஆளூர் கீழக்கட்டிமாங்கோட்டை சேர்ந்தவர் ஹரிஹரன் 22. பெயின்டிங் தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை அழைத்து சென்றுவிட்டார். குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பேரும் ஊருக்கு திரும்பினர். சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டு விட்டு ஹரிஹரன் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். நேற்று காலை ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள குடும்ப கோயிலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.