/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகுண்டும், குழியுமாக இருப்பதால் அவதி

ADDED : ஜன 12, 2025 01:13 AM
கரூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகுண்டும், குழியுமாக இருப்பதால் அவதி
கரூர்,:கரூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில், வெள்ளியணை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமான இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கரூர் நகரில் இருந்து, தான்தோன்றிமலை, மணவாடி, வெள்ளியணை, கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், எரியோடு வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திண்டுக்கல்லுக்கு செல்கின்றன. ஆனால் மதுரை, திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் வெள்ளியணை சாலையில் செல்வது குறைந்து வருகிறது. இதனால், வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து, திண்டுக்கல்லுக்கு செல்லும் வாகனங்கள் வெள்ளியணை வழியாக திருப்பி விடப்படுகின்றன.
அப்போது, வெள்ளியணை-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி, வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், வெள்ளியணையில் பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.