/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதம் அடைந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிகள்கரூரில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : பிப் 01, 2025 12:55 AM
சேதம் அடைந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிகள்கரூரில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், அடைப்பு மற்றும் சாக்கடை கழிவுகள் வெளியேறும் போது, அதை சரி செய்ய சாலையில் வட்ட வடிவில், துவாரம் போடப்பட்டு, சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி பகுதியில், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதம் அடைந்துள்ளன. அதில் உள்ள, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால், வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சி கவுன்சிலர்களிடம் புகார் செய்தும் பயனில்லை. மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் கல் மற்றும் குச்சிகளை, வாகனங்கள் செல்லாத வகையில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்த இடத்தில் பாதுகாப்புக்காக வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கரூர் நகரில் அடிக்கடி, பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, பல முறை சாலையில் பள்ளம் விழுந்துள்ளது.
குறிப்பாக, கோவை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அண்ணாவளைவு மற்றும் ராஜாஜி சாலையில் பல முறை பள்ளம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது, அன்சாரி தெருவில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் பயன் இல்லை. மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதம் அடைந்துள்ளது.
இதனால், பெரியளவில் பள்ளம் விழுந்து பாதிப்பு ஏற்படும் முன், சரிந்த பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.