/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., ஏமாற்றம் கரூர் நகராட்சி புதிய கட்டிடத்துக்கு கருணாநிதி பெயர்: தீர்மானம் "ஓகே'

ADDED : ஜூலை 27, 2011 01:54 AM
கரூர்: கரூர் புதிய நகராட்சி கூட்டத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பெயரும், கூட்ட அரங்குக்கு ஸ்டாலின் பெயரும் வைக்க நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., வினர் கொண்டு வந்த தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.
கரூர் நகராட்சி கூட்டம் நேற்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது.
புதிய நகராட்சி கட்டிடம் தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நகராட்சி கூட்டம் மீண்டும் 11.50 மணிக்கு கூடியது. கூட்டத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த 39 தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. சில தீர்மானங்கள் மீது திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கரூர் நகராட்சிக்கு ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரும், கூட்ட அரங்கிற்கு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரும் வைக்க வேண்டும்' என கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை படித்த, நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, அதை நிறைவேற்றுவதாக உடனடியாக அறிவித்தார். உடனே தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். கரூர் நகராட்சியில் போதிய பலம் இல்லாததால் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்து விட்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேரும் ஏமாற்றுத்துடன் அமைதியாக அமர்ந்தனர்.