/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்
/
மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்
ADDED : ஜன 19, 2025 01:48 AM
மொபட் மீது கார் மோதிமனைவி பலி; கணவன் காயம்
கரூர்,: கரூர் அருகே, மொபட் மீது கார் மோதிய விபத்தில், மனைவி உயிரிழந்தார். கணவனுக்கு காயம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 48; இவர் கடந்த, 16 இரவு டி.வி.எஸ்., மொபட்டில் கரூர்-கோவை சாலை வானவில் பிரிவில், மனைவி கோமதியுடன், 39, சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத், 29; என்பவர் ஓட்டி சென்ற இன்னோவா கார், டி.வி.எஸ்., மொபட் மீது பயங்கரமாக மோதியது. அதில், கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ரமேஷ், கோமதி ஆகியோர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் கோமதி உயிரிழந்தார்.
க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.