/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் தேவையின்றி கிடந்தகல், மண் அகற்றும் பணி தீவிரம்
/
சாலையில் தேவையின்றி கிடந்தகல், மண் அகற்றும் பணி தீவிரம்
சாலையில் தேவையின்றி கிடந்தகல், மண் அகற்றும் பணி தீவிரம்
சாலையில் தேவையின்றி கிடந்தகல், மண் அகற்றும் பணி தீவிரம்
ADDED : மார் 01, 2025 01:33 AM
சாலையில் தேவையின்றி கிடந்தகல், மண் அகற்றும் பணி தீவிரம்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில், குறுகலான சாலையில் தேவையின்றி கிடந்த கல், மண் அகற்றும் பணி நடந்தது.
பள்ளப்பட்டி நகராட்சியில், பெரும்பாலான சாலைகள் குறுகலாக உள்ளன. சாலைகளின் இருபுறமும் தேவையற்ற கல், மண் போன்றவை
உள்ளதால் வாகன
ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேவையற்ற கல், மண் ஆகியவற்றை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திடம் பள்ளப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பள்ளப் பட்டி நகராட்சிக்குட்பட்ட தவக்காயன் தெரு பகுதியில், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்த கல், மண் உள்ளிட்டவற்றை நகராட்சி நிர்வாகம் மூலம் சுத்தம் செய்தனர்.
நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, தவக்காயன் தெரு பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.