/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில்கும்பாபிேஷக விழா கோலாகலமாக துவக்கம்
/
மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில்கும்பாபிேஷக விழா கோலாகலமாக துவக்கம்
மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில்கும்பாபிேஷக விழா கோலாகலமாக துவக்கம்
மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில்கும்பாபிேஷக விழா கோலாகலமாக துவக்கம்
ADDED : மார் 08, 2025 01:33 AM
மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில்கும்பாபிேஷக விழா கோலாகலமாக துவக்கம்
கரூர்:கரூர் அருகே, ஆத்துார் மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில் மஹா கும்பாபிேஷக விழா, நேற்று தீர்த்தக்குடம் ஊர்வலத்துடன் தொடங்கியது.
கரூர் மாவட்டம், ஆத்துார் வீரசோளிபாளையத்தில், மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி கோவில், கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டு, ஆகமவிதிமுறைப்படியும், சிற்ப சாஸ்திர முறைப்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 4ல் இரவு கிராம சாந்தியுடன், கும்பாபிேஷக விழா தொடங்கியது. கடந்த, 5ல் வாஸ்து பூஜை, 6ல் பூர்ணாகுதி நடந்த பின், தீபாராதனை காட்டப்பட்டது.
நேற்று காலை கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பிருந்து, ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் தீர்த்தக்
குடங்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அப்போது, பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நடனம் முக்கிய
பகுதிகளில் நடந்தது.பிறகு, முதல் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை, 6:00 மணி மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மாலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், 10 அதிகாலை 3:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 6:45 மணிக்கு விநாயகர், மஹா சோளியம்மன், மஹா முத்துசாமி மற்றும் அனைத்து
பரிவார மூலமூர்த்திகள் மஹாகும்பாபிேஷகம் நடக்கிறது.பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிேஷகத்தையொட்டி இன்று (8 ல்) இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில், குடும்ப உறவுகளை பெரிதும் பேணி காப்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. 9:30 மணிக்கு ஆசிரியர் ராமசாமி கவுண்டர் குழுவினரின் கொங்கு கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (9ல்) மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் விஸ்வநாதன் தலைமையில் பவளக்கொடி கும்மியாட்டம், இரவு, 7:30 மணிக்கு ட்ரோன் ேஷா வான் வழி கண்காட்சி, இரவு, 8:00 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற
இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, ஆத்துார் காடை மற்றும் விளையன் குல குடிப்பாட்டுக்காரர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.