sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூருக்கு மீண்டும் வரத்துடிக்கும் இன்ஸ்.,க்கள் : பழைய இன்ஸ்பெக்டர்கள் வேண்டாம்

/

கரூருக்கு மீண்டும் வரத்துடிக்கும் இன்ஸ்.,க்கள் : பழைய இன்ஸ்பெக்டர்கள் வேண்டாம்

கரூருக்கு மீண்டும் வரத்துடிக்கும் இன்ஸ்.,க்கள் : பழைய இன்ஸ்பெக்டர்கள் வேண்டாம்

கரூருக்கு மீண்டும் வரத்துடிக்கும் இன்ஸ்.,க்கள் : பழைய இன்ஸ்பெக்டர்கள் வேண்டாம்


ADDED : ஆக 12, 2011 01:19 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ள இடங்களை பிடிப்பதில் வேறு மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

'கரூரில் ஏற்கனவே பணியாற்றி விட்டு சென்றவர்களை மீண்டும் நியமிக்க வேண்டாம்' என நேர்மையான போலீஸார் கருதுகின்றனர். பலமான கவனிப்பு மிகுந்த கரூர் மாவட்டத்தில் ஒருமுறை பணியாற்றினால் போதும், அந்த இடத்தை விட்டு போலீஸார் வேறு எந்த இடத்துக்கும் செல்ல பெரியதாக ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றினால் கூட, ஆறு மாதங்களில் மீண்டும் கரூர் மாவட்டத்துக்கு சிபாரிசு மூலம் வந்து விடுவது வழக்கம். ஆரம்பத்தில் போலீசாக வேலை சேர்ந்தவர்கள், டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்றும் கூட இன்னமும் கரூர் மாவட்டத்தையே சுற்றி மாறி, மாறி வேலை செய்து வருகிறவர்களும் தற்போது உண்டு. அந்த வகையில் போலீஸாரை எந்த ஊருக்கும் செல்லாத வகையில் செம கவனிப்பு மூலம் கரூர் மாவட்டம் 'கட்டி' போட்டிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் பெரியளவில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. கடந்த 4 ம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் ஒரே ஸ்டேஷனில் பல ஆண்டாக பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் ஏட்டுக்கள் ஆகியோர் தற்போது வேறு இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, கரூர் இன்ஸ்பெக்டர் நடேசன், வாங்கல் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கும்ம ராஜா ஆகியோர் ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். மாவட்ட தனிப்பிரிவுக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டராக, சுகுமார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். கரூர் டவுன் மற்றும் வாங்கல் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நேற்று மாலை வரை புதியதாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. நட்சத்திர அந்தஸ்தில் உள்ள கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன், மணல் அள்ளும் பணி நடக்கும் காவிரியாற்று பகுதிகள் கட்டுபாட்டில் உள்ள வாங்கல் போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள இடங்களில் அமர, பல போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து, வளமான பகுதிகளை நன்கறிந்து, வேறு மாவட்டத்தில் தற்போது பணிபுரிந்து வரும் இன்ஸ்பெக்டர்கள், மீண்டும் கரூரில் 'சேவை' செய்ய திருச்சி மண்டல போலீஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், 'கரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து டிரான்ஸ்ஃபரில் வேறு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்களை மீண்டும் நியமித்தால் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. மாற்றாக கரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள இடங்களில் முதன் முறையாக பணிபுரியும் வகையில் வேறு மாவட்டத்தை சேர்ந்த புதிய இன்ஸ்பெக்டர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்' என கரூர் மாவட்டத்தில் உள்ள நேர்மையான போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.








      Dinamalar
      Follow us