/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சேனை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கரூர் அருகே சேனை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கரூர் அருகே சேனை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கரூர் அருகே சேனை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 01, 2025 12:54 AM
கரூர் அருகே சேனை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றை நம்பி, குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடி நடந்தது. அதில், பணப்பயிர்களான நெல், கரும்பு, மஞ்சள், வாழை பயிரிட்டனர்.
ஆனால், காவிரியாற்றில் கடந்த, 2006 முதல், 2011 வரை, சில ஆண்டுகளில் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனால்,
விவசாயிகள் வறட்சியை தாங்கும் கோரை புல் சாகு படிக்கு மாறினர்.இந்நிலையில், கடந்தாண்டு கரூர் மாவட்டத்தில் சராசரி மழையளவை விட, அதிகளவில் மழை பெய்தது. மேலும், மேட்டூர் அணை, பவானி சாகர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டமும், தற்போது திருப்திகரமாக உள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் முள்ளங்கி, சேனை கிழங்கு, கத்தரிக்காய் மற்றும் கீரை வகைகளின் சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:தவறிய மழை காரணமாக நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை, கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மேற்கொள்ள முடியவில்லை. கோரைபுல்லை பயிரிட்டோம். தற்போது, மழை காரணமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வைத்து குறுகிய கால பயிர்களான, காய்கறிகள், கீரை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளோம்.
குறிப்பாக, மஞ்சளுடன் ஊடுபயிராக சேனை கிழங்கு பயிரிடுவது வழக்கம். தற்போது, நேரி டையாக காவிரியாற்று பகுதிகளில், சேனை கிழங்கு பயிரிட தொடங்கி யுள்ளோம். ஒரு கிலோ சேனை கிழங்கு, 60 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
திருமணம் உள்ளிட்ட, சுப விசேஷ காலங்களில் சேனை கிழங்குக்கு, கூடுதல் தேவை ஏற்படும் போது, மேலும் விலை உயரும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.